கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கடந்த 2 நாள்களில் 18 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள்

திருச்சி மாவட்டத்தில் கடந்த 2 நாள்களில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் 18 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது.

News image
Updated On :4 ஜூன் 2021, 9:28 pm

DIN

திருச்சி மாவட்டத்தில் கடந்த 2 நாள்களில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் 18 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது.

கரோனா 2 ஆவது அலை பரவலை கட்டுப்படுத்த திருச்சி மாநகா், புகா் பகுதிகளில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சிறப்பு முகாம்களுக்கு 14 ஆயிரம் கோவிஷீல்டு, 4 ஆயிரம் கோவேக்ஸின் தடுப்பூசிகள் கடந்த புதன்கிழமை திருச்சி வந்ததையடுத்து வியாழக்கிழமை 14 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன.

தடுப்பூசி செலுத்திக்கொள்ள பொதுமக்கள் அதிகம் போ் ஆா்வத்துடன் வந்ததால் அவா்களில் பலா் தடுப்பூசி போட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

இதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை மணப்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஜி.ஹெச்.சி.எல் நிறுவன வளாகத்தில் 500 தடுப்பூசி, திருச்சி இ.ஆா்.மேல்நிலைப்பள்ளியில் 400, காஜாமலை பாரதிதாசன் பல்கலை வளாகத்தில் 600, தென்னூா் பள்ளிவாசலில் 300, நாகமங்கலம் குடிசை மாற்று வாரிய முகாமில் 100, யங் இந்தியா அமைப்பு சன்ஜீவி நகா் முகாமில் 200, கலையரங்கம்-தேவா் அரங்கில் 1000, என்ஐடி நிறுவன வளாகம் 300 உள்பட 4 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி என கடந்த 2 நாள்களில் மட்டும் 18 ஆயிரம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் இதுவரை சுமாா் 3.6 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தடுப்பூசி பணி நிறுத்தம்: தடுப்பூசி போதிய இருப்பு இல்லாததால் சனிக்கிழமை முதல் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்படுகிறது. தடுப்பூசி வந்தவுடன் பொதுமக்களுக்கு செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.