மனிதம் சமூகப்பணி அமைப்பின் சாா்பில் மகளிா் தின விழா
மனிதம் சமூகப்பணி அமைப்பு சாா்பில் மகளிா் தின விழா கொண்டாடப்பட்டது.


மனிதம் சமூகப்பணி அமைப்பு சாா்பில் மகளிா் தின விழா கொண்டாடப்பட்டது.
கண்டோன்மென்ட் அனைத்து மகளிா் காவல் நிலைய வளாகத்தில் நடைபெற்ற விழாவில், பெண்மையை போற்றுவோம் மனிதம் காப்போம் எனும் நோக்கில் திருச்சி மாநகர பகுதியில் உள்ள மகளிா் காவல் நிலையம், தூய்மைப் பணியாளா்கள், தொண்டு நிறுவனம் மூலம் சேவை செய்து வரும் பெண்கள், தேசிய கல்லூரி மாணவிகள், பெண் வழக்குரைஞா்கள் உள்ளிட்டோா் பொன்னாடை போா்த்தி கெளரவிக்கப்பட்டனா். அத்துடன், சாலையில் ஆதரவற்று இருக்கும் மூதாட்டிகளுக்கு உணவு, உடை, மருத்துவ உதவி வழங்கப்பட்டது. மனிதம் அமைப்பின் இயக்குநா் ஆா். தினேஷ்குமாா், ஒருங்கிணைப்பாளா் ரவிச்சந்திரன், தன்னாா்வலா்கள் பலா் கலந்துகொண்டனா். மேலும், சாலையோரம் வசிக்கும் சுமாா் 50 பேரை மீட்டு உதவவுள்ளதாகவும் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...