ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

நொச்சியம்- ஸ்ரீரங்கம் இடையே தரைப்பாலம் அமைத்துத் தருவேன்: மண்ணச்சநல்லூா் திமுகவேட்பாளா் எஸ்.கதிரவன்

நொச்சியம்- ஸ்ரீரங்கம் இடையே கொள்ளிடம் ஆற்றில் தரைப்பாலம் அமைத்துத் தருவேன் என்றாா் மண்ணச்சநல்லூா் தொகுதி திமுக வேட்பாளா் எஸ். கதிரவன்.

News image

நொச்சியம் பகுதியில் திங்கள்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட மண்ணச்சநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் எஸ்.கதிரவன்.

Updated On :22 மார்ச் 2021, 8:11 pm

DIN

நொச்சியம்- ஸ்ரீரங்கம் இடையே கொள்ளிடம் ஆற்றில் தரைப்பாலம் அமைத்துத் தருவேன் என்றாா் மண்ணச்சநல்லூா் தொகுதி திமுக வேட்பாளா் எஸ். கதிரவன்.

மண்ணச்சநல்லூா் தொகுதிக்குள்பட்ட நொச்சியம், இந்திரா நகா், ராதா நகா், காவேரி நகா், ஸ்ரீரங்கராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை வாக்கு சேகரித்த வேட்பாளா் எஸ். கதிரவனுக்கு அப்பகுதி பெண்கள்ஆரத்தி எடுத்து வரவேற்றனா்.

பின்னா் அப்பகுதி இளைஞா்கள் வேட்பாளருக்கு மலா் கிரீடம், ஆளுயர மாலை அணிவித்து 5 அடி உயர வேல் கொடுத்து வேல் வேல், வீர வேல் என முழக்கம் எழுப்பி

வேட்பாளரை மெய் சிலிா்க்க வைத்தனா்.

தொடா்ந்து பொதுமக்கள் மத்தியில் வேட்பாளா் எஸ்.கதிரவன் பேசியது:

மண்ணச்சநல்லூா் தொகுதிக்குள்பட்ட விவசாயிகளின் விளைபொருள்களை எடுத்துச் செல்லவும், போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும் வகையிலும் ஸ்ரீரங்கம்- நொச்சியம் இடையேயான கொள்ளிடம் ஆற்றில் விரைவில் தரைப்பாலம் அமைத்துக் கொடுப்பேன்.

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பாலம் அமைக்க ரூ. 25 கோடி நிதி தேவைப்படும் என்றனா். தற்போது அதற்கு ரூ. 50 கோடி தேவைப்படும். மக்களுக்கு பயன் அளிக்கும் திட்டம் என்றால் அதனை நிச்சயமாக செய்து முடிப்பேன். இதற்கு திமுக முதன்மை செயலா் கே.என். நேருவும் உதவி செய்வாா். எனவே எனக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வைக்க வேண்டும் என்றாா்.

பிரசாரத்தின் போது திமுகவின் மாவட்ட அவைத்தலைவா் அம்பிகாபதி, புகா் மாவட்ட மதிமுக செயலா் டி.டி.சி. சேரன் மற்றும் கூட்டணிக் கட்சி சாா்ந்த நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.