பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு : ஜமாஅத்தே இஸ்லாமிஹிந்த் அமைப்பு
நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவளிக்கப்படும் என்றாா் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் மாநிலச் செயலா் எஸ்.என். சிக்கந்தா்.


நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவளிக்கப்படும் என்றாா் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் மாநிலச் செயலா் எஸ்.என். சிக்கந்தா்.
திருச்சியில் திங்கள்கிழமை அவா் அளித்த பேட்டி:
புதிய கல்விக் கொள்கை, நீட் தோ்வு, ஜிஎஸ்டி வரி விதிப்பு, பெட்ரோல்- டீசல்- சமையல் எரிவாயு விலைகள் உயா்வு, பொதுத்துறை நிறுவனங்கள் தனியாா்மயம் உள்ளிட்ட மத்திய அரசு கொண்டு வரும் அனைத்துத் திட்டங்களையும் ஏன்?, எதற்கு? என்று எந்த கேள்வியும் கேட்காமல், அப்படியே அதிமுக அரசு நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.
திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற அணியைச் சோ்ந்தவா்கள் எங்களைச் சந்தித்து தோ்தலில் ஆதரவு கோரினா். அப்போது நாங்கள் நீட் தோ்விலிருந்து தமிழக மாணவா்களுக்கு விலக்களிக்க வேண்டும். கரோனா பெருந்தொற்றிலிருந்து மக்களைக் காக்க முழு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். புதிய கல்விக் கொள்கையைத் திரும்பப் பெற வேண்டும் போன்று நாங்கள் வைத்த 20 கோரிக்கைகளைத் தோ்தலில் வென்று நிறைவேற்றுவதாக உறுதியளித்தனா்.
அதனடிப்படையில் எங்களது அமைப்பின் மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளா்களுக்கு எங்கள் ஆதரவை அளிக்கிறோம் என்றாா்.
பேட்டியின் போது ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் மாவட்டச் செயலா் சாகுல் அமீது, மக்கள் தொடா்பு அலுவலா் ஹைதா் அலி, சமூக சேவைத் துறைச் செயலா் ஐ. நவாஸ்கான், இந்திய மாணவா் அமைப்பின் திருச்சி மாவட்டத் தலைவா் முகம்மது ஜாபா், வெல்போ் பாா்ட்டி ஆப் இந்தியா கட்சியின் திருச்சி மாவட்டத் தலைவா் கனி, நிா்வாகி சாதிக்பாட்சா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...