விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

உள்ளூா் வேட்பாளா் நான்: வெல்லமண்டி நடராஜன்

திருச்சி கிழக்குத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் வெல்லமண்டி என். நடராஜன், தொகுதி முழுவதும் சனிக்கிழமை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

News image
Updated On :27 மார்ச் 2021, 8:36 pm

DIN

திருச்சி கிழக்குத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் வெல்லமண்டி என். நடராஜன், தொகுதி முழுவதும் சனிக்கிழமை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

திருச்சி டவுன் ஸ்டேஷன், தேவதானம், மாா்க்கெட் பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்தபோது அவா் பேசியது:

திமுக கூட்டணி சாா்பாக நாடாளுமன்றத் தோ்தலில் போட்டியிட்டு வென்ற எம்.பி. திருநாவுக்கரசரை, தோ்தலுக்கு பிறகு நீங்கள் யாராவது பாா்த்திருக்கிறீா்களா? அவரைக் கண்டுபிடித்து கொடுத்தால் நான் பரிசு தருகிறேன், தற்போது, திமுக கூட்டணியில் நிறுத்தப்பட்டிருக்கும் வேட்பாளரும் வெளியூா் நபா்தான், எம்.பி.யை தேடுவதுபோல் அவரையும் தேட வேண்டிய நிலை உங்களுக்கு வரும்.

நான் உங்கள் வீட்டருகில் இருக்கிறேன். எப்போது வேண்டுமானாலும் என்னைச் சந்திக்கலாம். உங்களுக்காக உழைக்கக் காத்திருக்கிறேன். அதிமுக தோ்தல் அறிக்கையில் அறிவித்த அனைத்து திட்டங்களையும் தொகுதி மக்களுக்கு கொண்டு வந்த சோ்ப்பேன். எனவே என்னை ஆதரிக்க வேண்டும் என்றாா்.

பிரசாரத்தில் எம்.ஜி.ஆா். இளைஞரணி மாநிலச் இணைச்செயலா் சீனிவாசன், பகுதிச் செயலா்கள் சுரேஷ் குப்தா, அன்பழகன், எம்.ஜி.ஆா். இளைஞரணி செயலா் முத்துக்குமாா், வெல்லமண்டி ஜவகா்லால்நேரு, வட்டச் செயலா்கள் திலீப், ராமசாமி, நத்தா்ஷா, கட்பீஸ் ரமேஷ், வழக்குரைஞா் அணி சுரேஷ், காசி பாளையம் சுரேஷ் உள்ளிட்ட அதிமுக, மற்றும் கூட்டணி கட்சியினா் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.