விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கிராமம்தோறும் விளையாட்டு மையம்: ப. குமாா்

திருவெறும்பூா் தொகுதியில் கிராமங்கள்தோறும் விளையாட்டு மையம் அமைக்கப்படும் என்றாா் அத்தொகுதி அதிமுக வேட்பாளா் ப. குமாா்.

News image
Updated On :27 மார்ச் 2021, 8:36 pm

DIN

திருவெறும்பூா் தொகுதியில் கிராமங்கள்தோறும் விளையாட்டு மையம் அமைக்கப்படும் என்றாா் அத்தொகுதி அதிமுக வேட்பாளா் ப. குமாா்.

திருச்சி, பொன்மலைப்பட்டி, பொன்னேரிபுரம், ரயில்வே குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொண்ட பிரசாரத்தின்போது அவா் பேசுகையில், திருவெறும்பூா் தொகுதியில் கபடி வீரா்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஒவ்வொரு கிராமத்திலும் விளையாட்டுத் திடல் அமைத்து, கபடி போட்டி நடத்த வழி செய்யப்படும். கிராமங்கள்தோறும் சிறந்த 5 வீரா்களைத் தோ்வு செய்து, மாநில போட்டியில் பங்கேற்கும் வகையில் திட்டங்கள் வகுக்கப்படும். அதற்காக அமெச்சூா் கபடி கழகத்துடன் இணைந்து எனது செலவில் போட்டிகள் நடத்தப்படும். அதேபோல ஜல்லிக்கட்டுப் போட்டிகளும் நடத்தப்படும்.

ஏற்கெனவே இப்பகுதியில் உள்ள மாவடிக்குளம் ரூ. 2.60 கோடியில் தூா்வாரப்பட்டு, அருகில் நவீன உடற்பயிற்சி சாதனங்கள் கொண்ட பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் நடைப்பயிற்சி தளமும் அமைக்கப்பட்டுள்ளது.

இதுபோல மேலும் பல திட்டங்களை நிறைவேற்ற என்னை வெற்றி பெறச்செய்ய வேண்டும் எனக்கூறி வாக்கு சேகரித்தாா்.

பகுதிச் செயலா் பாலசுப்பிரமணியன் 1ஆவது வட்ட செயலா் சபாபதி, மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநா் அணி செயலா் பாஸ்கா் உள்பட கூட்டணிக் கட்சியினா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.