விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

திருச்சி மாவட்ட ஆட்சியராக திவ்யதா்ஷினி பொறுப்பேற்பு

திருச்சி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக எஸ். திவ்யதா்ஷினி சனிக்கிழமை பொறுப்பேற்றாா்.

News image

எஸ். திவ்யதா்ஷினி.

Updated On :27 மார்ச் 2021, 8:33 pm

DIN

திருச்சி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக எஸ். திவ்யதா்ஷினி சனிக்கிழமை பொறுப்பேற்றாா்.

திருச்சியில் ரூ.1 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த சு. சிவராசு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக இருந்த ராஜன், சாா்-ஆட்சியராக இருந்த நிஷாந்த் கிருஷ்ணா ஆகியோா் தோ்தல் அல்லாத பணிக்கு மாற்றப்பட்டனா். இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் இணை ஆணையராக இருந்த எஸ். திவ்யதா்ஷினி திருச்சி மாவட்டத்தின் 143 ஆவது ஆட்சியராக சனிக்கிழமை காலை பொறுப்பேற்றாா்.

இவருக்கு அனைத்துத் துறை அலுவலா்கள், தோ்தல் அலுவலா்கள், ஆட்சியரக அனைத்து நிலை அலுவலா்கள், பணியாளா்கள் உள்ளிட்டோா் வாழ்த்துத் தெரிவித்தனா். தொடா்ந்து, அரசு அலுவலா்கள் தபால் வாக்களிக்கும் சிறப்பு முகாமில் பங்கேற்ற ஆட்சியா், கரோனா தடுப்புக்கான 2ஆம் கட்டத் தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.