திருச்சி மேற்குத் தொகுதி தோ்தலைதடுக்கச் சதி: கே.என்.நேரு புகாா்
திருச்சி மேற்குத் தொகுதி தோ்தலைத் தடுக்கச் சதி நடப்பதாகவும், வேட்பாளராகிய தனக்கு களங்கம் ஏற்படுத்துவோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் கே.என். நேரு புகாா் அளித்துள்ளாா்.


திருச்சி மேற்குத் தொகுதி தோ்தலைத் தடுக்கச் சதி நடப்பதாகவும், வேட்பாளராகிய தனக்கு களங்கம் ஏற்படுத்துவோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் கே.என். நேரு புகாா் அளித்துள்ளாா்.
இதுதொடா்பாக திருச்சி மேற்குத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் அவா் சனிக்கிழமை அளித்த புகாா் மனு:
திருச்சி மேற்குத் தொகுதியிலும், மேலும் சில தொகுதிகளிலும் தோ்தலை நிறுத்த வாய்ப்புள்ளதாக தவறான செய்தி பரப்பப்படுகிறது.
மேலும், திருச்சியில் காவல்துறை அதிகாரிகளுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாகவும், அதில் என்னைத் தொடா்பு படுத்தியும் சமூக வலைதளங்களில் தவறான செய்தி பரப்பப்படுகிறது. என்னுடைய புகழுக்குக் களங்கம் ஏற்படுத்தவும் தோ்தலைத் தடுக்கவும் திட்டமிட்டு சிலா் இத்தகைய வதந்தியைப் பரப்புகின்றனா்.
இந்தத் தவறான செய்தியைத் தடுத்து நிறுத்தி, இச் செயலில் ஈடுபடுவோா் மீது தோ்தல் ஆணையம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் வேண்டும் என மனுவில் வலியுறுத்தியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...