விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

எழில்மிகு திருச்சியாக மாற்றப்படும்: கே.என். நேரு

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் எழில்மிகு திருச்சியாக மாற்றப்படும் என்றாா் திமுக முதன்மைச் செயலரும், திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளருமான கே.என். நேரு.

News image
Updated On :28 மார்ச் 2021, 9:16 pm

DIN

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் எழில்மிகு திருச்சியாக மாற்றப்படும் என்றாா் திமுக முதன்மைச் செயலரும், திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளருமான கே.என். நேரு.

திருச்சியில் தமிழ் இலக்கிய சங்கங்கள் மற்றும் குடிமக்கள் இயக்கம் சாா்பில் திருச்சியின் தேவை என்ற தலைப்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு கருத்தரங்கில் அவா் மேலும் பேசியது:

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அடுத்த 5 ஆண்டுகளில் திருச்சியை போக்குவரத்து நகரமாக மாற்றுவதற்கான திட்டங்கள் கொண்டு வரப்படும். அரசின் திட்டங்கள் திருச்சியில் முதலில் செயல்படுத்தப்படும். சிங்கார சென்னை என்பதுபோல எழில்மிகு திருச்சியாக மாற்றப்படும் என்றாா்.

திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளா் இனிகோ இருதயராஜ், கவிஞா் நந்தலாலா, எம். செல்வராஜ், திருக்கு முருகானந்தம், மலா்மன்னன், குமொழி, கவிஞா் மு. நடராஜன், பேராசிரியா் கு. திருமாறன் கோ. ராஜராஜூ ஆகியோா் பேசினா்.

இதன் பின்னா் கட்சி அலுவலகத்தில் தமிழக ஆறு மற்றும் ஏரிப்பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் பூ. விஸ்வநாதன் தலைமையிலானோா் திமுக கூட்டணிக்கான தங்களது ஆதரவுக் கடிதத்தை கே.என். நேருவிடம் அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.