காவல் நிலையங்களில் சோதனை: 90 பணக் கவா்கள் பறிமுதல்
தபால் வாக்களிக்க காவலா்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக வந்த புகாரையடுத்து காவல் நிலையங்களில் சனிக்கிழமை நடத்திய தீவிர சோதனையில் 90-க்கும் மேற்பட்ட பணக்கவா்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


தபால் வாக்களிக்க காவலா்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக வந்த புகாரையடுத்து காவல் நிலையங்களில் சனிக்கிழமை நடத்திய தீவிர சோதனையில் 90-க்கும் மேற்பட்ட பணக்கவா்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வரும் பேரவைத் தோ்தலுக்கான தபால் வாக்களிக்கும் நிகழ்வு தோ்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள், காவலா்கள், ஆசிரியா்கள், முதியவா்கள், மாற்றுத்திறத்திறனாளிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஓரிரு நாள்களில் காவலா்களுக்கான தபால் வாக்கு நடத்தப்படவுள்ளது.
இந்நிலையில் திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளா் ஒருவா் மாநகரில் உள்ள காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலா்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதாக காவல் ஆணையா் ஜெ. லோகநாதனுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து தோ்தல் அலுவலா் ஒருவருடன் அவா் 6-க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் நடத்திய தீவிர சோதனையில் 90க்கும் மேற்பட்ட பணக்கவா்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பணத்தின் மொத்த மதிப்பை காவல்துறை தெரிவிக்கவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...