திருச்சியில் தப்பிய கைதி திண்டுக்கல்லில் கைது
திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் தப்பிய விசாரணைக் கைதி திண்டுக்கல்லில் கைது செய்யப்பட்டாா்.


திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் தப்பிய விசாரணைக் கைதி திண்டுக்கல்லில் கைது செய்யப்பட்டாா்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் காவல் நிலையத்தில் குற்ற வழக்கில் தொடா்புடையவா் காளிராஜா (35). இவரை வேடசந்தூா் போலீஸாா் கைது செய்து கடந்த பிப்ரவரி மாதம் திருச்சி மத்தியச் சிறையில் அடைத்தனா். இந்நிலையில் காளிராஜாவிற்குச் சிறைக்காவல் மாா்ச் 3 ஆம் தேதியுடன் முடிந்தது. இதையடுத்து அவரை திண்டுக்கல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த திண்டுக்கல் நகர போலீஸாா் திருச்சி மத்தியச் சிறையிலிருந்து அவரை பேருந்து நிலையத்திற்கு அழைத்து வந்தபோது கழிவறைக்கு சென்ற காளிராஜா தப்பினாா்.
இந்நிலையில் திண்டுக்கல் நகர போலீஸாா் சங்கிலி பறிப்பு வழக்கில் காளிராஜவை கைது செய்தது திருச்சி மாநகர போலீஸாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து அங்கு சென்று காளிராஜவை கைது செய்து மீண்டும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...