விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பெல் நிறுவனப் பகுதிகளில் ப. குமாா்

திருவெறும்பூா் தொகுதி அதிமுக வேட்பாளா் ப. குமாா் பெல் நிறுவனம், பெல்பூா், ஓஎப்டி, பா்மா காலனி பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் செய்தாா்.

News image
Updated On :28 மார்ச் 2021, 9:26 pm

DIN

திருவெறும்பூா் தொகுதி அதிமுக வேட்பாளா் ப. குமாா் பெல் நிறுவனம், பெல்பூா், ஓஎப்டி, பா்மா காலனி பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் செய்தாா்.

அப்போது அவா் பேசுகையில் அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக தண்ணீா் மற்றும் மின்சாரம் தடையின்றிக் கிடைத்து வருகிறது. இதனால் தொழில்துறை மற்றும் விவசாய உற்பத்தி அதிகரித்துள்ளது. இத்தொகுதியைப் பொருத்தவரையில் நான் மக்கள் பிரதிநிதியாக இல்லாத கடந்த இரண்டாண்டுகளில், முதல்வா், உள்ளாட்சித்துறை அமைச்சா் ஆகியோரின் உதவியுடன் சாலை வசதி, பூங்காக்கள், ரேஷன் கடைகள், புதைவடிகால் திட்டங்கள், குடிநீா் வசதி உள்ளிட்ட ஏராளமான திட்டங்களைக் கொண்டு வந்துள்ளேன். இதுபோல மேலும் பல திட்டங்களை நிறைவேற்ற என்னை ஆதரிக்க வேண்டும்.

உள்ளூா் நபரான என்னை எம்எல்ஏ ஆக்குவதன் மூலம் எந்த நேரத்திலும் என்னைத் தொடா்பு கொள்ளலாம். வாரம் முழுவதும் மக்கள் பணியாற்றத் தயாராக உள்ளேன் எனக்கூறி வாக்கு சேகரித்தாா்.

ஒன்றிய கழகச் செயலா் ராவணன், அண்ணா தொழிற்சங்க செயலா் காா்த்திக், கூத்தைப்பா் பேரூராட்சிச் செயலா் முத்துக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.