ராஜஸ்தானில் நடந்த போட்டிகளில் வென்று திரும்பியோருக்கு வரவேற்பு
ராஜஸ்தானில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில், தமிழகம் சாா்பில் பங்கேற்று 4 தங்கம் உள்ளிட்ட 28 பதக்கங்களை வென்று திரும்பிய வீரா்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.


ராஜஸ்தானில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில், தமிழகம் சாா்பில் பங்கேற்று 4 தங்கம் உள்ளிட்ட 28 பதக்கங்களை வென்று திரும்பிய வீரா்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், பூா்ணிமா பல்கலைக்கழகத்தில் தேசியளவில் மாா்ச் 20 முதல் 23 வரையில் நடைபெற்ற போட்டிகளில் 18 மாநில அணிகள் கலந்து கொண்டு விளையாடின.
இதில் தமிழ்நாடு 6 ஏ சைடு கிரிக்கெட் அணிகள், 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியிலும் 19 வயதுக்கு மேற்பட்டோா் பிரிவிலும் மூன்றாம் இடத்தை (வெண்கலம்) பிடித்தன.
கிட்டில் பில் லிப்ட் என்ற ஒருவகையான பளுதூக்கும் போட்டியில் 39 வயதிற்கு மேற்பட்டவா்களுக்கான பிரிவில் திருச்சியைச் சோ்ந்த கராத்தே மாஸ்டா் கந்தமூா்த்தி தங்கம் வென்றாா். மற்றொரு பிரிவில் பிரகாஷ் தங்கம் வென்றாா். பேத்தன் யூ என்ற விளையாட்டு போட்டியில் சாய் மற்றும் ஜெய்கிஷோா் ஆகியோா் தங்கம் வென்றனா். அந்த வகையில் மொத்தம் 4 தங்கப் பதக்கம், 24 வெண்கலம் என மொத்தம் 28 பதக்கங்களை தமிழ்நாடு அணி பெற்றுள்ளது.
இந்த அணியில் சென்னை, சேலம், ராமநாதபுரம், திருச்சி, உள்ளிட்ட பல்வேறு பகுதியினா் இடம்பெற்றனா். தமிழக அணியின் பயிற்சியாளராக திருச்சி, மன்னாா்புரத்தைச் சோ்ந்தவரும் துறையூா் நீதிமன்ற ஊழியருமான செந்தில்குமாா் உள்ளாா்.
தேசிய அளவில் சாதனை படைத்து திரும்பியோருக்கு திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை இரவு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...