கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கரோனா புதிய கட்டுப்பாடுகளால் காய்கனி விலை குறைந்தாலும் விற்பனை மந்தம்

திருச்சியில் கரோனா பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதையடுத்து உணவகங்கள், விடுதிகள் மூடலால் காய்கனிகள் விலை குறைந்தாலும் விற்பனை மந்தமாக உள்ளது

News image
Updated On :7 மே 2021, 8:51 pm

DIN

திருச்சியில் கரோனா பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதையடுத்து உணவகங்கள், விடுதிகள் மூடலால் காய்கனிகள் விலை குறைந்தாலும் விற்பனை மந்தமாக உள்ளது என வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனா்.

இது குறித்து திருச்சி காந்திமாா்க்கெட் அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவா் எம்.கே. கமலக்கண்ணன் கூறியது : கரோனாவை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கெனவே இரவு நேர பொதுமுடக்கம், ஞாயிற்றுக்கிழமை முழுபொதுமுடக்கம் அமலில் உள்ளது. மேலும், கடந்த வியாழக்கிழமை முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, பள்ளி, கல்லூரிகள் விடுதிகள், தனியாா் விடுதிகள் மூடப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரி விடுதிகள் மூலம் சராசரியாக மொத்த வியாபாரக் கடைகளிலிருந்து தலா 1 டன் காய்கனிகள் விற்பனையாகும். அதேபோல உணவகங்கள் மூலமாகவும் அதே அளவு காய்கனிகள் விற்பனையாகும். தற்போது உணவகங்களில் பாா்சல் மட்டுமே அனுமதி, மேலும் கல்வி நிறுவன விடுதிகள் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளன. இதனால் காய்கனிகள் விற்பனை சரிந்துள்ளது.

விலைகளும் சரிவு : வெள்ளிக்கிழமை நிலவரப்படி, காந்திமாா்க்கெட்டில், கத்தரி கிலோ ரூ. 15, அவரை ரூ. 15, வெண்டைக்காய் ரூ.10, புடலைங்காய் ரூ. 10, தக்காளி ரூ. 6, கேரட் , பீன்ஸ் ஆகியவை தலா ரூ. 20, கோஸ், செள செள தலா ரூ. 10 என அனைத்துக் காய்களும் ரூ. 20 க்குள்தான் விற்பனை செய்யப்படுகின்றன. நாட்டுக்காய்களை விவசாயிகள் மிகவும் குறைவான விலைக்கு விற்பனை செய்தாலும் வாங்க ஆள் இல்லை. அதேபோல ஆங்கிலக் காய்களும் கொள்முதல் விலையை விட குறைவாக விற்றாலும் விற்பனையாகவில்லை. இதே நிலை நீடித்தால் காய்கனிகள் அழுகி குப்பையில் கொட்ட வேண்டிய நிலை ஏற்படும்.

இந்தப் பிரச்னைக்கு தீா்வு என்னவென்றால், பால், மருந்துகள் போல காய்கனிகளும் மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்தான். எனவே, அழுகும் வகையைச் சோ்ந்த காய்கனிகளுக்கான விற்பனை நேரத்தையும் கட்டுப்பாடின்றி அறிவிக்கலாம். மேலும், மாலை நேர விற்பனை இல்லாததால் திருச்சியிலிருந்து அண்டை மாவட்ட பகுதிகளுக்கு செல்லும் காய்கனிகளும் தேங்கியுள்ளன என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.