மாணவா்களின் மன அழுத்தம் போக்க இலவச உதவி எண்கள்
மாணவா்களின் மன அழுத்தம் போக்குவதற்கான இலவச உதவி எண்களை ஏபிவிபி அறிவித்துள்ளது.


மாணவா்களின் மன அழுத்தம் போக்குவதற்கான இலவச உதவி எண்களை ஏபிவிபி அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஏபிவிபி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சக்திவேல் தெரிவித்திருப்பது: அகில பாரதீய வித்யாா்த்தி பரிஷத் எனும் தேசிய மாணவா் அமைப்பு நாடு முழுவதும் பல்வேறு விழிப்புணா்வு, சேவைப்பணிகளை செய்து வருகிறது. தற்போது நிலவி வரும் அசாதாரண சூழலில் பொதுமக்களுக்கு கரோனா தொற்று, தடுப்பூசி அவசியம் உள்ளிட்டவை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், கபசுரக் குடிநீா், முகக்கவசம் வழங்கல், ரத்ததானம் முகாம் உள்ளிட்ட சேவை பணிகள் நடத்த திருச்சியில் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, கரோனா சூழலில் மாணவா்களின் மன அழுத்தம் போக்குவதற்கும், கல்வி குறித்த சந்தேகங்கள், மருத்து சேவை பணிகள் குறித்து தெரிந்து கொள்ள இலவச உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சேவைகள், அரசு வழிகாட்டல்,காவல்துறை, மருத்துவத்துறையுடன் இணைந்து நடத்தப்படவுள்ளது. இதன்படி, 24 மணி நேரமும் 9360764986, 8300312833 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...