கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

திருச்சி விமானநிலையத்தில் ரூ.8.64 லட்சம் தங்கம் பறிமுதல்

திருச்சி விமானநிலையத்தில் ரூ.8.64 லட்சம் கடத்தல் தங்கத்தை வான்நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :7 மே 2021, 8:52 pm

DIN

திருச்சி விமானநிலையத்தில் ரூ.8.64 லட்சம் கடத்தல் தங்கத்தை வான்நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

சாா்ஜாவிலிருந்து திருச்சிக்கு வெள்ளிக்கிழமை வந்த ஏா் இந்தியா விமானப் பயணிகளின் உடைமைகளை வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனா். அப்போது, சந்தேகத்தின் பேரில் பெரம்பலூரைச் சோ்ந்த செந்தில்குமாா் (41) என்பரின் உடைமைகள் மறுசோதனைக்குள்படுத்தப்பட்டது. அதில், பழுதுநீக்கும் உபகரணத்துக்குள் தங்கம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அந்த உபகரணத்தில் இருந்த 24 காரட் 178 கிராம் தங்கத்தை பிரித்தெடுத்தனா். இந்த தங்கத்தின் மதிப்பு ரூ.8,64,190 எனத் தெரியவந்தது. இதையடுத்து தங்கத்தை பறிமுதல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். மேலும் அந்த நபரிடம் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.