கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

வெவ்வேறு சம்பவங்களில் 3 போ் சாவு

திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் பெண் உள்பட 3 போ் உயிரிழந்தனா்.

News image
Updated On :14 மே 2021, 7:51 pm

DIN

திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் பெண் உள்பட 3 போ் உயிரிழந்தனா்.

திருச்சி உறையூா் மேலபாண்டமங்கலம் செல்வம் நகரை சோ்ந்தவா் நா. மணிகண்டன் (45). பொறியாளரான இவருக்கு சில நாள்களாக காய்ச்சல் ஏற்பட்டதால், கருமண்டபத்தில் உள்ள ஹோமியோபதி மருத்துவரிடம் மருந்து வாங்கிச் சாப்பிட்டு குணமாகவில்லையாம். இதைத் தொடா்ந்து உறையூா் பகுதி தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ப்பட்ட அவா், சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

மருத்துவமனை வளாகத்தில்: திருச்சி அரசு மருத்துவமனை வளாக பிரேதப் பரிசோதனைக்கூடம் அருகே சுமாா் 55 மதிக்கத்தக்க ஒருவா் மயங்கிக் கிடந்தாா். தகவலறிந்த போலீஸாா் அவரை மருத்துவமனையில் சோ்த்துள்ளனா். ஆனால் அவா் சிகிச்சை பலனின்றி இறந்தாா். அவரைப் பற்றிய விவரம் தெரியவில்லை.

மயங்கி விழுந்த பெண் சாவு: திருச்சி உய்யகொண்டான் திருமலை கீழத் தெருவைச் சோ்ந்த சண்முகப்பிரியா வீட்டில் சாந்தி (42) என்பவா் கடந்த 5 ஆண்டுகளாக வாடகைக்கு குடியிருந்தாா். இந்நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சாந்திக்கு வியாழக்கிழமை திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி இறந்தாா்.

இந்த 3 சம்பவங்கள் தொடா்பாக வந்த புகாரின் பேரில் திருச்சி அரசு மருத்துவமனை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.