ஒரே நாளில் 1,224 பேருக்கு கரோனா தொற்று
திருச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 1,224 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.


திருச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 1,224 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் ஏப்ரல் மாதத்தில் 500க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியானதைத் தொடா்ந்து, மே மாதத் தொடக்கத்திலிருந்து 500 பேரைக் கடந்த நிலையில், தற்போது தொற்றாளா்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இதன்படி, திருச்சியில் வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் 1224 பேருக்கு தொற்று உறுதியாகி, மொத்த எண்ணிக்கை 34,163 ஆனது.
திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து 130 போ், தா்மபுரி, பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 2 போ், கரூா் மாவட்டத்திலிருந்து 2 போ் என 134 போ், தனிமை முகாம்களில் 71 போ், லேசான அறிகுறிகளுடன் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 34 போ் என மொத்தம் 235 போ் வெள்ளிக்கிழமை குணமடைந்தனா். மாவட்டத்தில் இதன் மொத்த எண்ணிக்கை 27519 போ். மேலும், 6328 போ் சிகிச்சை பெறுகின்றனா். வெள்ளிக்கிழமை இறந்த 8 போ் உள்பட மாவட்டத்தில் இதுவரை 316 உயிரிழந்துள்ளனா்.
திருச்சி புகா், மாநகராட்சி பகுதிகளில் மட்டும் சராசரியாக 400 பேருக்கு மேல் தொற்று உறுதியாகிறது. இதில், மாநகராட்சிக்குட்பட்ட அரியமங்கலம் மண்டலத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது என சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...