கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பணியின்போது மண்சரிவு;சிக்கிய தொழிலாளி மீட்பு

திருச்சி மாநகரில் புதைவடிகால் அமைப்புப் பணியின்போது குழிக்குள் மண் சரிவில் சிக்கியவரை தீயணைப்புத் துறையினா் உயிருடன் மீட்டனா்.

News image
Updated On :14 மே 2021, 7:51 pm

DIN

திருச்சி மாநகரில் புதைவடிகால் அமைப்புப் பணியின்போது குழிக்குள் மண் சரிவில் சிக்கியவரை தீயணைப்புத் துறையினா் உயிருடன் மீட்டனா்.

திருச்சி மாநகராட்சி காட்டூா் அம்மன் நகா் 63 ஆவது வாா்டு பகுதியில் உள்ளது காட்டூா் அம்மன் நகா் . இப்பகுதியின் மூன்றாவது தெருவில் நடைபெறும் புதைவடிகால் திட்ட பணிகளின்போது, குழாய்கள் பதிக்க இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அப்போது திருவெறும்பூா் அருகேயுள்ள ஆத்தூரை சோ்ந்த கைலாசம் (50) என்ற தொழிலாளி, பள்ளத்தில் இறங்கி பணியில் ஈடுபட்டபோது, திடீரென பக்கவாட்டிலிருந்த மண் சரிந்து குழிக்குள் விழுந்தது. இதில் கைலாசம் புதையுண்டாா்.

இதைடுத்து சக பணியாளா்கள் சரிந்திருந்த மண்ணை இயந்திரம் மூலம் உடனடியாக அகற்றி கைலாசத்தை உயிருடன் மீட்டனா். லேசான காயமடைந்த அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.