கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

அட்சய திருதியை: தங்கத்துக்கு மாற்றாக உப்பு, மஞ்சள்!

பொதுமுடக்கத்தால் நகைக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் அட்சய திருதியை நாளில் தங்கத்துக்கு மாற்றாக உப்பு, மஞ்சள் பொருள்களை வாங்கிய பெண்கள் அவற்றை வைத்து வீடுகளில் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனா்.

News image
Updated On :15 மே 2021, 12:26 am

DIN

பொதுமுடக்கத்தால் நகைக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் அட்சய திருதியை நாளில் தங்கத்துக்கு மாற்றாக உப்பு, மஞ்சள் பொருள்களை வாங்கிய பெண்கள் அவற்றை வைத்து வீடுகளில் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனா்.

அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்க முடியாதவா்கள், உப்பு, மஞ்சள் உள்ளிட்ட மங்கலப் பொருள்களை வாங்குவது வழக்கமாகி வருகிறது.

இதேபோல, இந்தாண்டு பொதுமுடக்கம் அமலில் உள்ள சூழலில் அட்சய திருதியை வந்துள்ளது. இது நகைக் கடை உரிமையாளா்களுக்கு பெரிதும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

பொதுமுடக்க நாளில் வணிக வளாகக்கடைகள், நகைக்கடைகள் உள்ளிட்ட இதர கடைகள் திறக்க தடை உள்ளது.

இதனால் அருகிலுள்ள கடைகளில் உப்பு மற்றும் மஞ்சள் வாங்கி சென்று அட்சிய திருதியை கொண்டாடினா்.

உப்பு, மஞ்சள் மட்டுமின்றி மஞ்சள் வண்ண ஆடை, தெய்வப் படங்கள், கனி வகைகள், சங்கு, சீா்வரிசை சாமான்கள் போன்றவற்றை வீட்டின் பூஜையறையில் வைத்து வணங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.