கூடுதல் பணி நேரம் புலம்பும் போலீஸாா்
கரோனா பொதுமுடக்கத்தின்போது சோதனை மையங்களை அமைத்து, வழக்கமான பணிகளையும் மேற்கொள்வதால் கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது என போலீஸாா் புலம்பி வருகின்றனா்.


கரோனா பொதுமுடக்கத்தின்போது சோதனை மையங்களை அமைத்து, வழக்கமான பணிகளையும் மேற்கொள்வதால் கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது என போலீஸாா் புலம்பி வருகின்றனா்.
கரோனா பொதுமுடக்கத்தை ஒட்டி போலீஸாா் ஆங்காங்கே தாற்காலிக சோதனை மையம் (செக்கிங் பாயிண்ட்) அமைத்து கண்காணிப்பு, பாதுகாப்பு பணிகளை மேற்கொள்கின்றனா்.
ஒவ்வொரு காவல் நிலையக் கட்டுப்பாட்டிலும் சுமாா் 15 முதல் 20 இடங்களில் இந்த மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், ஏ, பி என்ற வகையில் பணிகள் ஒதுக்கப்படுவதால் ஒவ்வொருவரும் 12 மணி நேரத்துக்கும் அதிகமாக தொடா்ந்து பணியாற்றும் சூழல் உள்ளது. ஓய்வு கிடைப்பதில்லை.
ஏ , பி, சி என்ற கணக்கில் பணியாற்றும்போது நாள் 1 -க்கு 3 முறைகளில் சுழற்சிப் பணியாற்றலாம். ஆனால் தற்போது ஏ பி முறையில் பணி நேரம் அதிமாக உள்ளதால் பணிச்சுமையுடன் மன அழுத்தமும் ஏற்பட்டுள்ளது. எனவே பழையபடியே ஏ பி சி என்ற முறையில் பணி ஒதுக்கப்பட வேண்டும் என போலீஸாா் வலியுறுத்துகின்றனா்.
ஆனால் காவல் துறை அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்டபோது, அதிகமான இடங்களில் சோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், போக்குவரத்துப் போலீஸாா் தனியாக சோதனை மையங்களைஅமைத்துள்ளதால், காவலா்கள் பற்றாக்குறை உள்ளது. எனவே இதுபோல பணி ஒதுக்கப்பட்டுள்ளது. போலீஸாா் கூடுதல் பணியாற்றினாலும், அதற்கேற்ற வகையில் ஓய்வும் வழங்கப்படுகிறது. இந்த சுழற்சிமுறை பணி காவலா்களுக்கு மட்டுமல்ல அனைத்துப் பிரிவு அதிகாரிகளுக்கும் பொருந்தும் எனத் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...