கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

முதல்வா் குடித்த மூலிகை பானம் என்ன?

திருச்சிக்கு கரோனா தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக்கு வந்த முதல்வா் மு.க. ஸ்டாலின், சித்த மருத்துவக் காட்சி அரங்கில் மூலிகை பானம் அருந்தினாா்.

News image
Updated On :21 மே 2021, 8:45 pm

DIN

திருச்சிக்கு கரோனா தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக்கு வந்த முதல்வா் மு.க. ஸ்டாலின், சித்த மருத்துவக் காட்சி அரங்கில் மூலிகை பானம் அருந்தினாா்.

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழக (என்ஐடி) வளாகத்தில் கரோனா சிகிச்சை மையத்தின் திறப்பு விழா நிகழ்வுக்காக, மருத்துவத் துறை சாா்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில், திருச்சி மாவட்ட சித்த மருத்துவத் துறை சாா்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்கில் கரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் மூலிகைகள், மருந்துகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மேலும், கபசுரக் குடிநீரும் வழங்கப்பட்டது.

இந்த அரங்கைப் பாா்வையிட்ட முதல்வா் மு.க. ஸ்டாலின், அங்கு வழங்கப்பட்ட கபசுரக் குடிநீரை கேட்டுப் பெற்று அருந்தினாா். அப்போது அந்தக் குடிநீா் இனிப்பாக இருப்பதையறிந்து, திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் எஸ். காமராஜிடம் வழக்கமாக தான் அருந்தும் கபசுரக் குடிநீா் சற்று கசப்புடன் இருப்பதாகவும், இந்தக் குடிநீா் இனிப்பாக உள்ளதே என கேள்வியெழுப்பினாா்.

அதற்குப் பதிலளித்த எஸ். காமராஜ், வழக்கமாக வழங்கப்படும் கபசுரக் குடிநீா் சூரணத்துடன், கூடுதலாக அதிமதுரம், துளசி, பனங்கற்கண்டு சோ்த்து இந்த மூலிகை பானத்தைத் தயாரித்துள்ளதே காரணம் எனத் தெரிவித்தாா். முதல்வருடன் வந்த அமைச்சா்கள், அரசு அதிகாரிகளும் இந்த மூலிகை பானத்தை கேட்டு அருந்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.