டெல்டா மாவட்டங்களில் நீர்நிலைகள் தூர்வாரும் பணிகள் தொடக்கம்: அமைச்சர் கே.என்.நேரு

மேட்டூர் அணையில் இருந்து விவசாய பணிகளுக்கு நீர் திறக்கும் முன் டெல்டா மாவட்டங்களில் ரூ 66 கோடி மதிப்பில் நீர்நிலைகள் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என்றார் தமிழக நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் க
அமைச்சர் கே.என்.நேரு.
அமைச்சர் கே.என்.நேரு.

மேட்டூர் அணையில் இருந்து விவசாய பணிகளுக்கு நீர் திறக்கும் முன் டெல்டா மாவட்டங்களில் ரூ 66 கோடி மதிப்பில் நீர்நிலைகள் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என்றார் தமிழக நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு. 

திருச்சி புத்தூரில் உள்ள அண்ணல் காந்தி நினைவு அரசு மருத்துவமனையில், கரோனா சிகிச்சைக்கென புதிதாக 75 ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்களை வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. அவற்றை தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே. என். நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் மருத்துவமனை நிர்வாகத்திடம் வழங்கினர். தொடர்ந்து அமைச்சர் கே. என். நேரு செய்தியாளர்களிடம் கூறியது: தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இணைந்து 150 ஆக்ஸிஜன் செறிவூட்டும் கருவிகளை அரசு மருத்துவமனைகளுக்கு வழங்குகின்றனர். 

அவற்றில் திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு 75-ம், தஞ்சை மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கு 75 என பிரித்து வழங்கப்பட்டுள்ளன. கரோனா சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் 1099 படுக்கைகளுடன் கூடிய சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் 775 காலியாக உள்ளன. ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் 743-ல் 30ம், ஆக்ஸிஜன் அல்லாத 356 படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையத்தில் 145 படுக்கைகளும் காலியாக உள்ளன. இங்கு நாள்தோறும் சுமார் 200க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற வருவதும், அதேபோல் 200க்கும் மேற்பட்டோர் குணமாகி செல்வதுமாக உள்ளது.
எனவே கடந்த நாட்களை ஒப்பிடும்போது, கரோனா பாதிப்பு குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

கரோனா சிகிச்சை மையங்களில் பணியாற்றும் வகையில் மருத்துவ பணியாளர்கள் தேர்வும் நடந்து வருகிறது. தமிழகத்தில் விவசாய பணிகளுக்கு என ஜூன் மாதம் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறக்கப்படுவது வழக்கம். அந்தவகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்டா மாவட்ட பகுதிகளில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் ரூ. 66 கோடி மதிப்பில் தூர்வாறும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் திருச்சி மாவட்டத்தில் மட்டும் ரூ.6 கோடி மதிப்பில் தூர்வாறும் பணிகள் நடந்து வருகின்றன. கரோனா சிகிச்சை மையத்தில் பாதுகாப்பு உடையுடன் சென்று நோயாளிகளை சந்தித்து ஆறுதல் கூறிய தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் ஆக மட்டுமே இருக்க முடியும் என்றார்.

நிகழ்வின்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு, மாநகராட்சி ஆணையர் சு. சிவசுப்பிரமணியன், மருத்துவ கல்லூரி முதல்வர் வனிதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com