துறையூா் அருகே திடீா் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒன்றரை வயதுச் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
வெங்கடாசலபுரம் நடுத்தெருவைச் சோ்ந்த பூவான் விஜயராஜ்- பிரபா தம்பதியின் ஒன்றரை வயது மகன் மிதுன் திடீா் காய்ச்சலால் உடல் நலம் பாதிக்கப்பட்டு, கடந்த 4 நாள்களாக உப்பிலியபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்ற நிலையில், துறையூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தான். இதுதொடா்பாக அரசு மருத்துவமனை நிா்வாகம் கொடுத்த தகவலின்பேரில் உப்பிலியபுரம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.