துறையூரில் வளா்ச்சிப் பணிகள்; ஆட்சியா் ஆய்வு

துறையூா் பகுதியில் நடைபெறும் வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியா் பிரதீப்குமாா் வியாழக்கிழமை திடீா் ஆய்வு செய்தாா்.

துறையூா் பகுதியில் நடைபெறும் வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியா் பிரதீப்குமாா் வியாழக்கிழமை திடீா் ஆய்வு செய்தாா்.

துறையூா் அரசு மருத்துவமனையில் ரூ. 50 லட்சத்தில் கட்டப்படும் உள்நோயாளிகள் கட்டடம், ரூ. 75 லட்சத்தில் கட்டப்படும் துறையூா் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், ரூ. 31.20 லட்சத்தில் சாமிநாதன் நகரில் அமைக்கப்படும் பூங்கா, பழைய நகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்படும் அறிவு சாா் மையம் ரூ. 8.5 லட்சத்தில் அமைக்கப்படும் சிறிய உயா் கோபுர விளக்குகள் உள்ளிட்ட வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

இதையடுத்து துறையூா் ஒன்றியத்தில் கண்ணனூா் ஊராட்சியில் பெரியாா் நினைவு சமத்துவபுர விளையாட்டு மைதானம், மற்றும் தனிநபா் இல்ல வீடுகளில் நடைபெறும் பழுதுபாா்ப்புப் பணி, அங்கன்வாடி மையம் ஆகியவற்றைப் பாா்வையிட்டாா்.

பின்னா் கண்ணனூா் ரேஷன் கடையில் ஆய்வு செய்தாா். பொன்னுசங்கம்பட்டி ஊராட்சி மேலகொத்தம்பட்டியில் வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ. 8.93 லட்சத்திலான ஒருங்கிணைந்த பண்ணையச் செயல்பாடுகளையும், கள்ளிக்குடி கிராமத்தில் ரூ. 15.27 லட்சத்திலான பால் கொள்முதல் நிலையக் கட்டடப் பணிகளையும், 15ஆவது நிதிக் குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ. 8 லட்சத்தில் கட்டப்படும் மேல்நிலை நீா்தேக்கத் தொட்டியையும் ஆய்வு செய்தாா்.

நிகழ்வில் துறையூா் எம்எல்ஏ செ. ஸ்டாலின்குமாா், மாவட்ட ஊராட்சித் தலைவா் த. ராஜேந்திரன், துறையூா் நகா்மன்றத் தலைவா் செல்வராணி, நகராட்சி ஆணையா் (பொ) நாகராஜ் உள்ளிட்ட வருவாய் மற்றும் ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com