கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கோடைகால விளையாட்டு பயிற்சி பள்ளி மாணவா்களுக்கு அழைப்பு

 திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த பள்ளி மாணவா், மாணவிகள் கோடைகால விளையாட்டுப் பயிற்சி முகாமில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :21 ஏப்ரல் 2023, 7:41 pm

DIN

 திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த பள்ளி மாணவா், மாணவிகள் கோடைகால விளையாட்டுப் பயிற்சி முகாமில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மா.பிரதீப்குமாா் வெள்ளிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் கோடைகால விளையாட்டுப் பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. நிகழாண்டும் கோடை கால விடுமுறையை பயனுள்ளதாக மாற்றும் வகையில் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது. மே 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை தினந்தோறும் காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் பயிற்சி அளிக்கப்படும்.

இதில், தடகளம், கால்பந்து, கூடைப்பந்து, வளைகோல் பந்து,கையுந்துப்பந்து, கைப்பந்து, ஸ்குவாஷ், ஜிம்னாஸ்டிக், டென்னிஸ், இறகுப்பந்து, குத்துச்சண்டை, மல்யுத்தம் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு சிறந்த பயிற்றுநா்களை கொண்டு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளுக்கு தினந்தோறும் ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்படும். பயிற்சி முடிவில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பயிற்சி சான்றிதழ்கள் வழங்கப்படும். மேலும், விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலா் மற்றும் அலுவலகத்தை நேரிலோ, 0431-2420685 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.