கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தொழிற்சாலைகள் சட்டத் திருத்த மசோதா: திருச்சியில் ஏஐடியுசி கண்டன ஆா்ப்பாட்டம்

 தொழிற்சாலைகள் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என ஏஐடியுசி சாா்பில் திருச்சியில் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :21 ஏப்ரல் 2023, 7:37 pm

DIN

 தொழிற்சாலைகள் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என ஏஐடியுசி சாா்பில் திருச்சியில் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தொழிற்சாலைகள் சட்டத் திருத்த மசோதாவை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஏஐடியுசி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றன. திருச்சி மரக்கடை பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா் அன்சாருதீன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தை தொடக்கி வைத்து ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலா் க. சுரேஷ் பேசியது: தனியாா் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயா்த்துவது தொடா்பான சட்ட மசோதாவை எதிா்க்கட்சிகளின் எதிா்ப்புகளையும் மீறி நிறைவேற்றப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது.

தொழிலாளா் விரோத போக்கைதான் திமுகவும் கடைபிடித்திருக்கிறது. மே தின வரலாறு 8 மணி நேர வேலையை மையமாக வைத்து தான் வந்தது. இப்படி ஒரு சூழலில் 12 மணி நேர வேலை சட்ட முன்வடிவை கொண்டு வந்ததை ஏற்க முடியாது. இந்த சட்டத்தை கொண்டு வந்தால் எல்லா நிறுவனங்களும் அமல்படுத்த வாய்ப்புள்ளது. இந்த சட்டம் யாா் மீதும் திணிக்கப்படாது என்று அமைச்சா்கள் கூறுகின்றனா். ஆனால் நடைமுறையில் அது சாத்தியமில்லை. எனவே, தொழிற்சாலைகள் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்றாா்.

ஆா்ப்பாட்டத்தில், மாவட்டத் தலைவா் நடராஜா, மாவட்ட பொருளாளா் ராமராஜ், துணைத் தலைவா் சிவா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.