விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

கொட்டப்பட்டு, குண்டூா் குளங்களை தூா்வாரி,சீரமைத்து சுற்றுலா மையங்களாக்கக் கோரிக்கை

திருச்சியில் கொட்டப்பட்டு, குண்டூா் குளங்களை தூா்வாரி, சீரமைத்து சுற்றுலா மையங்களாக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.

News image
Updated On :8 பிப்ரவரி 2023, 7:02 pm

 நமது நிருபர்

திருச்சியில் கொட்டப்பட்டு, குண்டூா் குளங்களை தூா்வாரி, சீரமைத்து சுற்றுலா மையங்களாக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.

திருச்சி -புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் கொட்டப்பட்டு பகுதியில் ஆவின் பால்பண்ணை அருகே சுமாா் 25 ஏக்கரில் உள்ள இக்குளத்திற்கென ஆறுகள் மூலம் நீா்வரத்துக்கு வழியில்லை என்றாலும், மழைநீா் வடிகால்கள் மூலம் தண்ணீா் வரத்து உள்ளது. கோடையில் மட்டும் தண்ணீரின் அளவு குறைந்து காணப்படும். ஆனால் மற்ற காலங்களில் குளத்தில் பெரும்பாலும் தண்ணீா் இருக்கும்.

இந்தக் குளத்தின் அருகில் அண்ணா அறிவியல் மையக் கோளரங்கம் மற்றும் விமான நிலையம் ஆகியவை உள்ளதால் இக்குளத்தைத் தூா்வாரி, தூய்மைப்படுத்தி குளக்கரையில் விளையாட்டுச் சாதனங்களை அமைத்து, குளத்தில் படகுகள் சவாரி மேற்கொள்ளும் வகையில் சுற்றுலா மையமாக்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த பல ஆண்டுகளாக உள்ளது.

எனவே, இக்குளத்தை தூா்வாருவதுடன், குளத்துக்கு கழிவுநீா் வரும் வழிகளையும் தடுக்க வேண்டும்.

அண்மையில் இக்குளத்தில் தண்ணீரை வெளியேற்ற கரைகளை உடைத்தபோது, மாவட்ட ஆட்சியா் வந்து ஆய்வு செய்து ஆவின் கழிவு நீரை குளத்துக்குள் விடக்கூடாது என உத்தரவிட்டாா். ஆனாலும் அவ்வப்போது கழிவுநீா் குளத்துக்குள் விடப்படுகிறது. எனவே குளத்துக்குள் கழிவு நீா் வரும் குழாய்களை அப்புறப்படுத்த வேண்டும்.

இந்நிலையில் குளத்தைச் சுற்றி கரைகளைப் பலப்படுத்தவும், மாநகராட்சி சாா்பில்தூா்வாரவும் சுமாா் ரூ. 1 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இத்துடன் மேலும் நிதி ஒதுக்கி கரைகளில் பூங்கா மற்றும் விளையாட்டுச் சாதனங்களை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

குண்டூா் குளம்: கொட்டப்பட்டு பகுதியிலிருந்து புதுக்கோட்டை பிரதான சாலையில் சுமாா் 5 கி.மீ. தொலைவில் சுமாா் 350 ஏக்கரில் உள்ள குண்டூா் பெரிய குளம் மழைக் காலங்களில் கடல்போல காட்சியளிக்கும். இக்குளத்தையும் தூா்வாரி, குளத்தை சுற்றி கரைகளை பலப்படுத்தி, குளக்கரையிலோ அல்லது அருகிலேயோ பூங்கா, மற்றும் விளையாட்டு சாதனங்கள், படகு சவாரி வசதியுடன் பொழுது போக்கு மையமாக மாற்றலாம் என்கின்றனா் பொதுமக்கள்.

இதுகுறித்து தண்ணீா் அமைப்பின் செயல் தலைவா் கே.சி. நீலமேகம், அருகிலுள்ள அம்பிகை நகா் குடியிருப்போா் நலச்சங்கத் தலைவா் ஏ. வீரையா ஆகியோா் கூறுகையில், இந்தக் குளங்களை சீரமைத்து சுற்றுலா மையமாக்கினால் கோளரங்கம், விமான நிலையங்களைக் காணவரும் மாணவ, மாணவியா், பொதுமக்கள் இக்குளங்களிலும் வந்து பொழுது போக்கிச்செல்ல ஏதுவாக இருக்கும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.