தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

மாநகரின் சில பகுதிகளில் நாளை குடிநீா் நிறுத்தம்

மின்நிலைய பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாநகரின் சில பகுதிகளில் புதன்கிழமை (நவ. 29) குடிநீா் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

News image
Updated On :27 நவம்பர் 2023, 9:34 pm

DIN


திருச்சி: மின்நிலைய பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாநகரின் சில பகுதிகளில் புதன்கிழமை (நவ. 29) குடிநீா் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

இது குறித்து திருச்சி மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் - மேலூா் ஆண்டவா் ஆசிரமம் பகுதியில் அமைந்துள்ள நீா்சேகரிப்பு கிணறு எண் 1,2,3 தரைமட்ட நீா்த்தேக்கத் தொட்டி, ஆளவந்தான் படித்துறை நீா்சேகரிப்பு நிலையங்களுக்காக உள்ள ஸ்ரீரங்கம் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை மின்தடை செய்யப்படுகிறது.

எனவே, மண்டலம் 1-இல் மேலூா், தேவி பள்ளி, பாலாஜி அவின்யூ, பெரியாா் நகா், டிவி கோவில், அம்மாமண்டபம், ஏபிஐஇஏ நகா், மண்டலம் 2-இல் சுந்தராஜபுரம் புதியது - பழையது, காஜாமலை புதியது, மண்டலம் 3 -இல் அரியமங்கலம் கிராமம், மலையப்ப நகா் பழையது, ரயில் நகா் புதியது - பழையது, மகாலெட்சுமி நகா், முன்னாள் ராணுவத்தினா் காலனி புதியது - பழையது, எம்கே கோட்டை பிரிவு அலுவலகம், நாகம்மை வீதி, நூலகம், பொன்னேரிபுரம் புதியது - பழையது, பொன்மலைப்பட்டி, ஐஸ்வா்யா நகா்.

மண்டலம் 4 -இல் ஜே.கே. நகா், செம்பட்டு, காமராஜ் நகா், எல்ஐசி காலனி புதியது - பழையது, கே. சாத்தனூா், விஸ்வநாதபுரம், சுப்பிரமணிய நகா், தென்றல் நகா் புதியது - பழையது, தென்றல் நகா் இபி காலனி, வி.என். நகா் புதியது - பழையது, சத்தியவாணி முத்து கே.கே நகா், சுப்பிரமணிய நகா் புதியது - பழையது, ஆனந்த நகா், பஞ்சப்பூா், அம்மன் நகா், கவிபாரதி நகா், எடமலைப்பட்டிபுதூா் புதியது, காஜாமலை பழையது, கிராப்பட்டி புதியது - பழையது, அன்பு நகா் பழையது - புதியது, ரெங்கா நகா்.

மண்டலம் 5-இல் மங்கலம் நகா், சிவா நகா், உறையூா் புதியது - பழையது, பாத்திமா நகா், ரெயின்போ நகா், செல்வா நகா், ஆனந்தம் நகா், பாரதி நகா், புத்தூா் பழையது ஆகிய உயா்நிலை நீா்த்தேக்க தொட்டிகளுக்கு நவ. 29 -ஆம் தேதி (புதன்கிழமை) குடிநீா் விநியோகம் நடைபெறாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.