மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தமிழகத்தில் 6 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர்: அமைச்சர் சி.வி. கணேசன்

தமிழகத்தில் 6 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் தெரிவித்தார். 

News image
Updated On :6 மார்ச் 2023, 8:24 am

DIN

தமிழகத்தில் 6 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் தெரிவித்தார். 

திருச்சியில்  மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார் முன்னிலையில், ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்,  திருச்சிராப்பள்ளி அரசு ஈட்டுறுதி மருத்துவமனை வளாகம், அறுவை சிகிச்சை மையம், மகப்பேறு சிகிச்சை மையம், குழந்தைகள் நல மருத்துவ மைய பிரிவு, சித்தா பிரிவு ஆயுர்வேத சிகிச்சை  பிரிவு, சமையல் கூடம். உள்ளிட்ட  இடங்களை  நேரில் பார்வையிட்டு நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் மற்றும் உள்நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டு அறிந்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் கலந்துரையாடினார். 

இந்நிகழ்வில் தொழிலாளர் ஈட்டுறுதி கழக மருந்தகங்கள் மற்றும் மருத்துவமனைகளின் இயக்குநர் ஜே. ராஜமூர்த்தி, மண்டல நிர்வாக மருத்துவ அலுவலர்  எஸ்.பாரதி, மருத்துவமனை கண்காணிப்பாளர் இனிகோ ராஜ் உள்ளிட்ட மருத்துவர்கள் மருத்துவ பணியாளர்கள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறுகையில், தமிழ்நாட்டில் பணியாற்றும் அனைத்து வெளி மாநில தொழிலாளர்களும் பாதுகாப்பாக இருக்கிறார்கள்.

Story image

பிகாரிலிருந்து அரசு சார்பில் தமிழ்நாடு வந்த குழுவிடம் அந்த தொழிலாளர்களே இதை தெரிவித்துள்ளார்கள். அந்த குழுவும் அதை உறுதிப்படுத்தி உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் வெளி மாநில தொழிலாளர்கள் கணக்கெடுப்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் தோராயமாக 6 லட்சம் வெளி மாநில தொழிலாளர்கள் உள்ளனர் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.