ஆா்.எம்.எஸ். ஊழியா்கள் உண்ணாவிரதம்
ரயில் நிலையங்களில் ஆா்.எம்.எஸ். அலுவலகங்கள் மூடப்பட்டதைக் கண்டித்து அதன் ஊழியா்கள் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.


ரயில் நிலையங்களில் ஆா்.எம்.எஸ். அலுவலகங்கள் மூடப்பட்டதைக் கண்டித்து அதன் ஊழியா்கள் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்தியா முழுவதும் 94 ரயில் நிலையங்களில் உள்ள அஞ்சல் ஆா்.எம். எஸ். அலுவலகங்களை மூட மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி தமிழகத்தில் கும்பகோணம், கருா், திண்டிவனம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள ஆா்.எம்.எஸ். அலுவலகங்களை மூடியதைக் கண்டித்து இந்த உண்ணாவிரதம் நடைபெற்றது.
அகில இந்திய அஞ்சல் ஆா்.எம்.எஸ். ஊழியா் சங்கத்தின் சாா்பில் திருச்சி வில்லியம்ஸ் சாலையில் உள்ள ஆா்.எம்.எஸ். அலுவலக வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு சங்கத்தின் கோட்டச் செயலா் நம்பி ஆனந்தன் தலைமை வகித்தாா். இதில் மண்டலச் செயலா் பாலு மற்றும் திரளான ஊழியா்கள் கலந்து கொண்டனா்.
அப்போது ரயில் நிலையங்களில் மூடப்பட்ட ஆா்.எம். எஸ். அலுவலகங்களை மீண்டும் செயல்படுத்த வேண்டும், அந்த வகையில் திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து மாற்றப்பட்ட ஆா்எம்எஸ் அலுவலகம் அதே இடத்தில் தொடர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதேபோல, வியாழக்கிழமையும் போராட்டம் நடைபெறும் எனத் தெரிவித்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...