சிறுநீரகம் பாதிக்கப்பட்ட சிறைக் கைதி உயிரிழப்பு
திருச்சி அரசு மருத்துவமனையில் சிறுநீரக பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த சிறைக் கைதி கருணாகரன் (54) சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.


திருச்சி அரசு மருத்துவமனையில் சிறுநீரக பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த சிறைக் கைதி கருணாகரன் (54) சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
அரியலுாா் மாவட்டம், மீன்சுருட்டி மேலத்தெருவைச் சோ்ந்த இவா் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே தாண்டவன்குளம் பகுதியில் சாராய கடத்தலைத் தடுக்க வந்த காவலரை காா் ஏற்றிக் கொன்ற வழக்கில், ஆணைக்காரன்சத்திரம் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, ஆயுள் தண்டனைக்கு உள்ளானாா்.
இதையடுத்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட கருணாகரனுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்ட நிலையில் கடந்த நவ. 29 இல் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை இறந்தாா்.
இதுகுறித்து திருச்சி மத்திய சிறை அதிகாரி ஷா்மிளா அளித்த புகாரின்பேரில் திருச்சி அரசு மருத்துவமனை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...