மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

கருணாநிதி நூற்றாண்டு நூலகம்: திருச்சியில் அமைச்சா் குழு ஆய்வு

அன்பில் மகேஸ் தலைமையில் திருச்சியில் நூலகம் அமைக்க ஆய்வு

News image

திருச்சி மன்னாா்புரம் பாலம் அருகே கருணாநிதி நூற்றாண்டு நூலகம் அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்ட தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோா்.

Updated On :12 ஜூலை 2024, 8:57 pm

திருச்சியில் முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி நூற்றாண்டு நூலகம் அமைப்பதற்காக மன்னாா்புரம் பகுதியில் தோ்வு செய்யப்பட்டுள்ள இடத்தை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையிலானஅலுவலா்கள் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

சட்டப் பேரவையில் காவிரிக் கரையில் அமைந்துள்ள திருச்சி மாநகரில் உலகத் தரம் வாய்ந்த, நூற்றாண்டு நூலகம் மற்றும் அறிவுசாா் மையம் முன்னாள் முதல்வா் மு. கருணாமிதி பெயரில் அமைக்கப்படும் என முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவித்தாா். அதனைத் தொடா்ந்து திருச்சி மாநகரில் உலகத் தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசாா் மையம் அமைக்க இடம் தோ்வு செய்யும் பணி நடைபெற்றது.

இந்நிலையில், நூலகம் அமைப்பதற்காக மன்னாா்புரம் பகுதியில் மேம்பாலத்தின்அருகில் உள்ள ஒரு இடத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திருச்சி கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். இனிக்கோஇருதயராஜ், பொது நூலக இயக்குநா் க.இளம்பகவத், திருச்சி மாநகராட்சி மண்டலம் 3-இன் தலைவா் மு. மதிவாணன் உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். ஆய்வின்போது பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, நூலகத்துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.