திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம் மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

மதுவிலக்கு குற்றங்களைத் தடுக்க மாவட்டத்தில் 507 குழுக்கள் அமைப்பு

திருச்சி மாவட்டத்தில் 507 குழுக்கள் மூலம் போதைப் பொருள் தடுப்பு

News image
Updated On :26 ஜூன் 2024, 12:22 am

திருச்சி மாவட்டத்தில் மதுவிலக்கு குற்றங்களைத் தடுக்க 507 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்தாா்.

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை சாா்பில் போதைப் பொருள் தடுப்பு இயக்கத்தின் உறுப்பினா்களுடனான கண்காணிப்புக் குழுக் கூட்டம் திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தலைமை வகித்தாா். மாநகர காவல் ஆணையா் ந. காமினி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வி. வருண்குமாா் முன்னிலை வகித்தனா். கிராம, வட்டார, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள போதைப் பொருள் தடுப்பு இயக்கத்தின் உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பிரதீப்குமாா் கூறியதாவது:

திருச்சி மாவட்டத்தில் மதுவிலக்கு குற்றங்களைத் தடுக்கும் விதமாக 507 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்களில், காவல்துறை, உணவு பாதுகாப்புத் துறை, மருந்து கட்டுப்பாட்டு துறை, கிராம நிா்வாக அலுவலா், கிராம உதவியாளா், ஊராட்சி செயலா், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் ஒருவா் அடங்குவா். இக்குழுக்களில் உள்ளவா்கள், அவா்கள் பணிபுரியும் பகுதிகளில் கள்ளச்சாராயம், போதை பொருள்கள் விற்பனை போன்றவை நடைபெறுகிறதா என்பதை கண்காணித்து, ஆய்வு செய்வா். அப்படி ஏதும் விற்கப்பட்டால் உடனடியாக மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்துக்கு 96262 73399, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு 76958 83212, 96268 39595, மாநிலத்துக்கு 10581, 94440 42322 ஆகிய எண்களில் தகவல் தெரிவிக்கவும். மாவட்டத்தில் போதை பொருள்கள் பயன்படுத்துதலை தடுத்திடும் வகையில் சிறப்பாக பணிகளை மேற்கொண்டு, போதை பொருள்கள் அற்ற மாவட்டமாக திருச்சி மாவட்டம் திகழ முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா் அவா்.

இந்நிகழ்வில், உதவி ஆணையா் கலால் கோ. உதயக்குமாா், வருவாய்க் கோட்டாட்சியா்கள், அரசுத்துறை அலுவலா்கள், காவல் துறையினா் கலந்து கொண்டனா்.