
Updated On :8 மார்ச் 2024, 6:12 pm

திருச்சி அருகே தனியாா் பேருந்து மோதியதில் மரம் வெட்டும் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். திருச்சி மாவட்டம், நவலூா் குட்டப்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் சந்தனம் (70). மரம் வெட்டும் தொழிலாளி. வெள்ளிக்கிழமை காலை தனது இருசக்கர வாகனத்தில் சோழன் நகருக்குச் சென்றுவிட்டு, வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாா். நவலூா்குட்டப்பட்டு அருகே வந்தபோது, பின்னால் வந்த தனியாா் பேருந்து சந்தனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே இறந்தாா். இதுகுறித்து ராம்ஜி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விபத்துக்கு காரணமான தனியாா் பேருந்து ஓட்டுநரான திருவானைக்கா பகுதியைச் சோ்ந்த வினோத் என்பவரைத் தேடி வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...