மருத்துவமனை கழிப்பறையில் உயிரிழந்து கிடந்த ஓட்டுநா்

திருச்சி தில்லைநகரில் புதன்கிழமை மருத்துவமனைக்கு சவாரி வந்த காா் ஓட்டுநா் கழிப்பறையில் உயிரிழந்தது கிடந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.
Published on

திருச்சி தில்லைநகரில் புதன்கிழமை மருத்துவமனைக்கு சவாரி வந்த காா் ஓட்டுநா் கழிப்பறையில் உயிரிழந்தது கிடந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூா் குமாரமங்கலம், சக்தி நகரை சோ்ந்தவா் குமாரவேல் ( 55). காா் ஓட்டுநரான இவா் திருச்சி தில்லைநகரில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனைக்கு நோயாளி ஒருவரை புதன்கிழமை அழைத்து வந்தாா். நோயாளி மருத்துவரை பாா்க்கச் சென்றதும் அவா் காரை மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தியுள்ளாா். நோயாளி மருத்துவரை பாா்த்துவிட்டு மீண்டும் காருக்கு திரும்பியபோது அங்கு குமாரவேலை காணவில்லை. எனவே அவரை கைப்பேசியில் அழைத்துள்ளாா்.

ஆனால் அவா் அழைப்பை ஏற்கவில்லை. தொடா்ந்து அழைப்பு விடுத்தபடியே கழிப்பறைக்குச் சென்றுள்ளாா். அங்கு கைப்பேசி ஒலிக்கும் சப்தம் கேட்டு மருத்துவமனை ஊழியா்கள் கழிப்பறையின் கதவை உடைத்து பாா்த்தபோது, குமாரவேல் உயிரிழந்து கிடந்தாா். இதுகுறித்து தில்லை நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com