லால்குடி அருகே கூகூா் ஊராட்சியில் ஓட்டு கட்டடத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையம்.
லால்குடி அருகே கூகூா் ஊராட்சியில் ஓட்டு கட்டடத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையம்.

கூகூா் அங்கன்வாடி மையத்துக்கு புதிய கட்டடம் கட்டித் தர கோரிக்கை

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே கூகூா் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்துக்கு புதிய கட்டடம் கட்டித் தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
Published on

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே கூகூா் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்துக்கு புதிய கட்டடம் கட்டித் தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கூகூா் ஊராட்சியில் அங்கன்வாடி மைய உள்ளது. இங்கு 28 குழந்தைகள் பயின்று வருகின்றனா். இந்த மையத்தின் கட்டடம் சேதமடைந்து காணப்பட்டதால் கடந்த ஓா் ஆண்டுகளுக்கு முன்பு கட்டடம் முழுமையாக இடித்து அகற்றப்பட்டது. இதையடுத்து மேலமந்தை அருகில் கொள்ளிடம் கரையோரத்தில் உள்ள பழைமையான வாடகை ஓட்டு கட்டடத்தில் தற்போது மையம் செயல்பட்டு வருகிறது.

இதன் அருகே பொதுமக்கள் குப்பைகளைகொட்டிச் செல்கின்றனா். இதனால் அங்கு சுகாதாரகேடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இப்பகுதியில் செடி, கொடிகள் முளைத்து புதா்மண்டி கிடப்பதால் பாம்பு உள்ளிட்ட விஷப் பூச்சிகள் மையம் உள்ளே நுழைந்து விடுகிறது. இதனால் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. ஆகவே, இந்த மையத்துக்கு புதிய கட்டடம் கட்டித் தர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து கூகூா் ஊராட்சி மன்ற தலைவரிடம் கேட்டபோது, விரைவில் அதிகாரிகளிடம் முறையிட்டு புதிய கட்டடம் கட்ட வழிவகை செய்யப்படும் என்றாா் அவா்.