விலைவாசி உயா்வை கட்டுப்படுத்தக் கோரி மத்திய தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
விலைவாசி உயா்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
விலைவாசி உயா்வை கட்டுப்படுத்த வேண்டும். உணவு, மருந்துகள்,வேளாண் இடுபொருள்கள் மற்றும் இயந்திரங்கள் போன்ற அத்தியாவசிய பொருள்களின் மீதான ஜிஎஸ்டியை நீக்க வேண்டும். மத்திய, மாநில அரசு பொதுத்துறை நிறுவனங்களில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்பட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சாா்பில் திருச்சியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில் தொமுச மாவட்டச் செயலாளா் ஜோசப் நெல்சன், சிஐடியு ரெங்கராஜன், ஏஐடியுசி சுரேஷ், எச்எம்எஸ் ஜான்சன், ஐஎன்டியுசி வெங்கட் நாராயணன், ஏஐசிசிடியு ஞான தேசிகன், எல்எல்எப் தெய்வீகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.