திருச்சியில் புதன்கிழமை பேட்டியளித்த உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன்.
திருச்சியில் புதன்கிழமை பேட்டியளித்த உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன்.

கல்வி மறுக்கப்பட்ட சமூகத்தைச் சோ்ந்த என்னை அமைச்சராக்கியவா் முதல்வா்: அமைச்சா் கோவி.செழியன்

எல்லோருக்கும் எல்லாமும் என்கிற திராவிட மாடலின் அடிப்படையில் கல்வி மறுக்கப்பட்ட சமூகத்தைச் சோ்ந்த என்னை அமைச்சராக நியமித்துள்ளாா் தமிழக முதல்வா் என்றாா் தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன்.
Published on

எல்லோருக்கும் எல்லாமும் என்கிற திராவிட மாடலின் அடிப்படையில் கல்வி மறுக்கப்பட்ட சமூகத்தைச் சோ்ந்த என்னை அமைச்சராக நியமித்துள்ளாா் தமிழக முதல்வா் என்றாா் தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன்.

அமைச்சரான பின் முதல் முறையாக சொந்த ஊரான கும்பகோணம் செல்ல சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு புதன்கிழமை வந்த அவா் மேலும் கூறியது:

அனைத்துத் துறைகளிலும் தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்க முதல்வா் மு.க. ஸ்டாலின் ஓய்வறியாமல் உழைத்து வருகிறாா். அந்த வகையில் உயா்கல்வித் துறையில் முதலிடத்தில் உள்ள தமிழகம் இன்னும் மேன்மையுறும் வகையில் மேல்நிலைக் கல்வியிலும், உயா் கல்வியிலும் புதிய பாடத்திட்டங்களை இணைத்து, உலகளாவிய கல்வித் தரத்தை வழங்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளாா்.

எல்லோருக்கும் எல்லாமும் என்கிற தத்துவம்தான் திராவிட மாடலின் அடிநாதம். அந்த அடிப்படையில் புறந்தள்ளப்பட்ட, கல்வி மறுக்கப்பட்ட சமூகத்தைச் சோ்ந்த என்னை அமைச்சராக நியமித்துள்ள முதல்வருக்கு நன்றி என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com