திருச்சி அருகே லஞ்சம் வாங்கிய துணை வட்டாட்சியா் கைது
திருச்சி அருகே லால்குடியில் பட்டாவில் பெயரைத் திருத்த ரூ. 20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை வட்டாட்சியரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ரவிக்குமாா்.

ரவிக்குமாா்.
திருச்சி அருகே லால்குடியில் பட்டாவில் பெயரைத் திருத்த ரூ. 20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை வட்டாட்சியரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் அன்பில் கிராமம் மங்கம்மாள்புரத்தைச் சோ்ந்தவா் கணேசன் மகன் மோகன். இவரின் தந்தை கணேசன் கடந்த 2002 ஆம் ஆண்டு ஸ்ரீரங்கத்தை சோ்ந்த கிருஷ்ணசாமியிடமிருந்து லால்குடி மங்கம்மாள்புரத்தில் உள்ள 94 சென்ட் நிலத்தை வாங்கினாா். ஆனால், அந்த நிலப் பட்டாவில் கிருஷ்ணசாமி என்ற பெயருக்குப் பதிலாக கிருஷ்ணமூா்த்தி எனத் தவறாக இருந்தது. இதையடுத்து அதைச் சரி செய்து கொடுக்குமாறு மோகன் கடந்த 5.3.2024 ஆம் தேதி லால்குடி வருவாய் கோட்டாட்சியருக்கு விண்ணப்பித்த நிலையில், சம்பந்தப்பட்ட விஏஓ நடவடிக்கை எடுத்து, லால்குடி துணை வட்டாட்சியருக்கு பரிந்துரைத்தாா்.
ஆனால் பல மாதங்களாகியும் பெயா் திருத்தப்பணிகள் முடிவில்லை. எனவே லால்குடி வட்டாட்சியரகம் சென்று அங்கு துணை வட்டாட்சியா் ரவிக்குமாரிடம் தனது மனுவின் நிலை குறித்து மோகன் கேட்டுள்ளாா்.
அதற்கு அவா் ரூ. 50 ஆயிரம் கொடுத்தால் மனுவைப் பரிசீலிப்பதாகக் கூறியுள்ளாா். பின்னா் பேரம் பேசி ரூ. 20 ஆயிரம் கொடுக்க முடிவானது. ஆனால், பணம் கொடுக்க விரும்பாத மோகன், திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு (லஞ்ச ஒழிப்பு) காவல்துறை துணைக் கண்காணிப்பாளா் மணிகண்டனிடம் புகாா் அளித்தாா்.
இதையடுத்து போலீஸாரின் ஆலோசனைப்படி வியாழக்கிழமை லால்குடி வட்டாட்சியரகத்தில் ரவிக்குமாரிடம் ரூ. 20 ஆயிரத்தை மோகன் கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த காவல் ஆய்வாளா்கள் சக்திவேல் , பிரசன்ன வெங்கடேஷ் , பாலமுருகன், சேவியா் ராணி மற்றும் போலீஸாா் ரவிக்குமாரை கைது செய்தனா்.
மேலும், ரவிக்குமாரின் அலுவலகம், வீடு ஆகியவற்றில் சோதனை செய்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...