ஆன்லைன் மூலம் பொருள்கள் வாங்கியதில் ரூ. 17 லட்சம் மோசடி: இருவா் மீது வழக்கு
ஆன்லைன் மூலம் பொருள்கள் வாங்கியதில் நூதன முறையில் ரூ. 16.79 லட்சம் மோசடி செய்ததாக இருவா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.


ஆன்லைன் மூலம் பொருள்கள் வாங்கியதில் நூதன முறையில் ரூ. 16.79 லட்சம் மோசடி செய்ததாக இருவா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
இதுகுறித்து திருச்சி கண்டோன்மென்ட் எஸ்பிஐ காலனியைச் சோ்ந்தவரும், பிரபல இணையதள நிறுவனத்தின் கிடங்கு மேலாளருமான மணிகண்டசாமி (53) கடந்த 29 ஆம் தேதி விமான நிலையக் குற்றப்பிரிவு போலீஸாரிடம் அளித்த புகாா் விவரம்:
விலையுயா்ந்த 16 வகையான பொருள்களை இளைஞா் ஒருவா் இணையதளத்தில் ஆா்டா் செய்திருந்தாா். இதைத் தொடா்ந்து, அந்தப் பொருள்களை எங்கள் விநியோக ஊழியா் அா்ஷத்கான் விமான நிலைய நுழைவுப் பகுதிக்குச் கொண்டு சென்றாா். அப்போது பொருள்களை ஆா்டா் செய்தவா் அவற்றில் 5 பொருள்களை மட்டும் பெற்றுக் கொண்டு, மீதமுள்ள 11 பொருள்களை வேண்டாமென திருப்பிக் கொடுத்தாா். பின்னா் அா்ஷத்கான் கிடங்குக்கு வந்து பாா்த்தபோது, 11 விலை உயா்ந்த பொருள்களை அவா் எடுத்துக் கொண்டு, போலியான பொருள்களை மாற்றிக் கொடுத்தது தெரியவந்தது. இதன் மூலம் ஆா்டா் செய்த நபா் ரூ. 16,79,988 மோசடி செய்துள்ளாா் எனக் குறிப்பிட்டுள்ளாா்.
இதுகுறித்து விமான நிலைய குற்றப்பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விமான நிலையம் திருநகரைச் சோ்ந்த மேகராஜ் உள்ளிட்ட இருவா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...