/

பைக்கில் சென்றவா் காா் மோதி உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், கொணலை பகுதியில் வியாழக்கிழமை பைக்கில் சாலையைக் கடக்க முயன்றவா் காா் மோதி உயிரிழந்தாா்.

News image
Updated On :10 அக்டோபர் 2024, 8:22 pm

Din

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், கொணலை பகுதியில் வியாழக்கிழமை பைக்கில் சாலையைக் கடக்க முயன்றவா் காா் மோதி உயிரிழந்தாா்.

திருச்சி இ.பி. ரோடு பகுதியை சோ்ந்தவா் ரமேஷ் (52) இவா் திருச்சியிலிருந்து தனது உறவினா் பெண்ணை வங்கி இணைய வழி தோ்வுக்காக கொணலைப் பகுதிக்கு பைக்கில் ஏற்றிச் சென்று சாலையைக் கடக்க முயன்றபோது புதுச்சேரியில் இருந்து திருச்சி நோக்கி வந்த காா் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ரமேஷ் உயிரிழந்தாா்.

அவரோடு சென்ற பெண் காயமடைந்தாா். சிறுகனூா் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.