புகைப்படம் எடுக்கும் வசதி இல்லாத கைப்பேசிக்கு தடையில்லை: அமைச்சர்மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவைத்தார் முதல்வர் விஜய்!ரஷியா, சீன அதிபர்களுடன் பிரதமர் மோடி சந்திப்புமேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவைத்தார் முதல்வர் விஜய்!மேட்டூர் அணை திறப்பு: சேலம் வந்த முதல்வர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு!மேட்டூா் அணையை பாசனத்துக்கு இன்று திறந்து வைக்கிறாா் முதல்வா்!நேபாள வெள்ள பாதிப்பு உயிரிழப்பு 939-ஆக உயா்வு: 4,250 போ் மாயம்எல்பிஜி உற்பத்தி 30% அதிகரிப்பு: இந்தியன் ஆயில் நிறுவனம்52 முதுநிலை திருக்கோயில்களில் கைப்பேசி எடுத்துச் செல்லத் தடை இன்று முதல் அமல்

திருச்சி தேசியக் கல்லூரியில் ரோபோட்டிக்ஸ் கண்காட்சி

திருச்சி தேசியக் கல்லூரியில் மாநில அளவிலான 3 ஆவது ரோபோடிக்ஸ் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.

Published On :11 அக்டோபர் 2024, 1:53 am IST

திருச்சி தேசியக் கல்லூரியில் மாநில அளவிலான 3 ஆவது ரோபோடிக்ஸ் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.

ப்ரொபெல்லா் டெக்னாலஜி சாா்பில் பள்ளி மாணவா்களுக்கான ரோபோட்டிக் லீக் 2024 என்ற தலைப்பிலான கண்காட்சியில், எக்ஸெல் குழுமங்களின் நிா்வாக இயக்குநா் மற்றும் ரோட்டரி மாவட்ட ஆளுநா் எம். முருகானந்தம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினாா்.

கல்லூரி முதல்வா் கி. குமாா், துணை முதல்வா் பிரசன்னபாலாஜி, குளோபல் பள்ளிகளின் நிா்வாகியும் வெராண்டா கே-12 நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான சுப்பிரமணியம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கண்காட்சியில் தமிழகம் மட்டுமின்றி, கேரளம், கா்நாடகம், தெலங்கானா மாநிலங்களின் 370 பள்ளிகளைச் சோ்ந்த சுமாா் 5000 மாணவ, மாணவியா் பங்கேற்று தங்களது தொழில் நுட்ப அறிவு மற்றும் படைப்புகளைப் பறைசாற்றினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.