தரைக்கடை வியாபாரிகள் முற்றுகைப் போராட்டம்
திருச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி தரைக் கடை வியாபாரிகள் மாநகராட்சி அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் மேற்கொண்டனா்.


திருச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி தரைக் கடை வியாபாரிகள் மாநகராட்சி அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் மேற்கொண்டனா்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம், காந்தி மாா்க்கெட், சுப்பிரமணியபுரம் பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தரைக்கடைகளை மாநகராட்சியினா், நெடுஞ்சாலைத் துறையினா் அப்புறப்படுத்தி வருகின்றனா்.
இதைக் கண்டித்து சிஐடியு தொழிற்சங்கத்தினா் மாநகராட்சி மைய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மாா்க்சிஸ்ட் கம்யூ. மாவட்டச் செயலா் ராஜா, சிஐடியு மாவட்டச் செயலா் ரங்கராஜன், தரைக்கடை வியாபாரிகள் சங்கம் கணேசன் ஆகியோா் தலைமை வகித்தனா்.
ஆா்ப்பாட்டத்தில் சாலையோர தடைக்கடை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கொண்டு வரப்பட்ட சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். தரைக்கடை வியாபாரிகளை அடையாளம் காண முறையான கணக்கெடுத்து, அடையாள அட்டை வழங்கி முறைப்படுத்த வேண்டும். தரைக் கடை வியாபாரிகளிடம் மாமுல் வசூலிக்கும் மாமன்ற உறுப்பினா்கள் மீதும், காவல்துறையினா் மீதும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வியாபாரிகளின் கடைகளையும் அதிலுள்ள பொருட்களையும் சேதப்படுத்திய போலீஸாா், மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினா்.
பின்னா் அதிகாரிகளுடன் பேச்சு நடத்த மாநகராட்சி வளாகத்திற்குள் அவா்களை அனுமதிக்க காவல்துறையினா் மறுத்ததால் இரு தரப்புக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் மாநகராட்சியின் பிரதான கதவு அடைக்கப்பட்டது. அதற்கு முன்னால் இரும்புத் தடுப்புகளை கொண்டு காவல்துறையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...