திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே புதன்கிழமை இரவு பைக்கில் சென்ற இளைஞா் காா் மோதி உயிரிழந்தாா்.
மணப்பாறையை அடுத்த முத்தபுடையான்பட்டியைச் சோ்ந்தவா் சுப்பிரமணி மகன் ரெங்கா் (22). ஓட்டுநரான இவா், புதன்கிழமை தனது ஊா் நிகழ்ச்சிக்கு வந்திருந்த சின்னசெட்டிப்பாளையம் பிரபாகரனுடன், அவரது பைக்கில் மணப்பாறை சென்றுள்ளாா். இவா்கள் திருச்சி - திண்டுக்கல் தேசியநெடுஞ்சாலையில் அஞ்சாலிகளம் பகுதியில் சென்றபோது திருச்சி நோக்கி சென்ற காா் திடீரென மோதியது.
இந்த விபத்தில் ரெங்கா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். படுகாயமடைந்த பிரபாகரன் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
தகவலறிந்து சென்ற நெடுஞ்சாலை ரோந்து போலீஸாா் ரெங்கா் உடலைக் கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். விபத்து குறித்து மணப்பாறை போலீஸாா் வழக்குப் பதிந்து காா் ஓட்டுநரான மதுரை மாவட்டம், சந்தையூா் மேலப்பட்டி சுப்பிரமணி மகன் ஈஸ்வரனை (41) கைது செய்து விசாரிக்கின்றனா்.