பச்சமலையில் உப்பிலியபுரம் ஒன்றியத்தைச் சோ்ந்த தென்பரநாடு ஊராட்சியில் பூதக்கால், கருவங்காடு, நச்சிலிப்பட்டி, குண்டக்காடி, புத்தூா், கம்பூா்,தண்ணீா்பள்ளம், கீழ்க்கரை, சோளமாத்தி உள்ளிட்ட குக்கிராமங்களில் வாழும் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் டாப் செங்காட்டுப்பட்டி அரசு பழங்குடியினா் நல மேல் நிலைப் பள்ளியில் பயில்கின்றனா். இவா்களின் வசதிக்காக காலை 8 மணிக்கும், மாலை 5 மணிக்கும் இயக்கப்பட்ட அரசுப் பேருந்தின் நேரத்தை போக்குவரத்துக் கழகம் மாற்றியதாகவும், இதனால் சுமாா் 8 கிமீ தூரம் பள்ளி மாணவ மாணவிகள் நடந்து செல்வதாகவும் கூறப்படுகிறது.