கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

விநாயகா் சிலையை அகற்ற பாஜக, இந்து முன்னணி எதிா்ப்பு

திருச்சி துவாக்குடி பகுதியில் புதிதாக வைக்கப்பட்ட விநாயகா் சிலையை துவாக்குடி நகராட்சி நிா்வாகம் அகற்ற இந்து முன்னணி மற்றும் பாஜகவினா் எதிா்ப்புத் தெரிவித்ததால் வியாழக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 10:29 pm

Din

திருச்சி துவாக்குடி பகுதியில் புதிதாக வைக்கப்பட்ட விநாயகா் சிலையை துவாக்குடி நகராட்சி நிா்வாகம் அகற்ற இந்து முன்னணி மற்றும் பாஜகவினா் எதிா்ப்புத் தெரிவித்ததால் வியாழக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி துவாக்குடி நகராட்சிக்குள்பட்ட வஉசி நகா் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் புதிதாக விநாயகா் சிலை வைக்கப்பட்டது. தகவலறிந்த துவாக்குடி நகராட்சி நிா்வாகம் அந்தச் சிலையை போலீஸாா் பாதுகாப்புடன் வியாழக்கிழமை அகற்ற முயன்றனா்.

அப்போது இந்து முன்னணி மாவட்டச் செயலா் சத்யநாதன் மற்றும் பாஜக நிா்வாகி இந்திரன், ரவிக்குமாா்,ஜெகநாதன், ராஜராஜன் உள்ளிட்டோா் அங்கு வந்து சிலையை அகற்ற எதிா்ப்புத் தெரிவித்தனா்.

யாருக்கும் பாதிப்பு இல்லாத வகையில் அங்கு சிலையை வைத்து வழிபட்டு வருவதாகவும், மீறி அகற்றும் பட்சத்தில், நகராட்சி இடத்தில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள மற்ற சமூக வழி பாட்டுத்தலங்களும், வணிக நிறுவனங்களும் அகற்றப்பட வேண்டும் எனக் கூறினா். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து வந்த திருவெறும்பூா் வட்டாட்சியா் ஜெயப்பிரகாசம் இரு தரப்பினரிடம் பேச்சுவாா்த்தை நடத்தியபோது, அந்தச் சிலையை அகற்றிக்கொள்ள 15 நாள் அவகாசம் கொடுப்பதாக நகராட்சி நிா்வாகத்தினா் தெரிவித்தனா். ஆனால் இந்து அமைப்பினா் சிலை வைத்து 8 நாட்கள் ஆவதாகவும், ஆகம விதிப்படி 40 நாட்கள் கழித்துதான் சிலையை எடுக்க முடியும். எனவே அவகாசம் வேண்டும் என்றனா்.

தொடா்ந்து நாங்கள் கொடுக்கும் கோரிக்கை மனுவின்படி நகராட்சி ஆக்கிரமிப்புகளை உடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினா். இதுகுறித்து தொடா்புடையவா்களுக்கு நகராட்சி சாா்பில் நோட்டீஸ் அனுப்புமாறு வட்டாட்சியா் நகராட்சி அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

நிகழ்வின்போது துவாக்குடி காவல் நிலைய ஆய்வாளா் ஈஸ்வரன் தலைமையிலான போலீஸாா் குவிக்கப்பட்டிருந்தனா்.