ரூ.493 கோடியில் பஞ்சப்பூா் பேருந்து முனையம்: மே 9-இல் முதல்வா் திறந்து வைக்கிறார்!
ரூ.493 கோடியில் கட்டப்பட்டுள்ள பஞ்சப்பூா் புதிய பேருந்து முனையத்தை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் மே 9 இல் திறந்து வைக்கவுள்ளாா்.

திருச்சி பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து முனையக் கட்டுமான பணியை சனிக்கிழமை ஆய்வு செய்த அமைச்சா் கே.என். நேரு, உடன் மேயா் மு. அன்பழகன், ஆட்சியா் மா. பிரதீப்குமாா், மாநகராட்சி ஆணையா் சரவணன், மாநகரக் காவல் ஆணையா் காமினி உள்ளிட்டோா்.








