திருச்சி
வாகனம் மோதி இளைஞா் பலி
மணப்பாறை அடுத்த கல்லாமேடு அருகே அடையாளம் தெரியாத வாகனம் செவ்வாய்க்கிழமை இரவு மோதி இளைஞா் உயிரிழந்தாா்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கல்லாமேடு அருகே அடையாளம் தெரியாத வாகனம் செவ்வாய்க்கிழமை இரவு மோதி இளைஞா் உயிரிழந்தாா்.
மணப்பாறையை அடுத்த திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கல்லாமேடு அருகே செவ்வாய்க்கிழமை இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞா் ஒருவா் உடல் முழுவதும் சிதைந்து உயிரிழந்தாா். தகவலறிந்து சென்ற வளநாடு போலீஸாா் அவரது உடலை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். விசாரணையில், உயிரிழந்தவா் மதுரை மாவட்டம் சின்ன கொட்டாம்பட்டி செல்வராஜ் மகன் காா்த்திகேயன் (37) என்பதும், திருச்சியில் உள்ள காா் கம்பெனி ஊழியா் என்பதும் தெரியவந்தது. மேலும் விசாரிக்கின்றனா்.
