3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

பிப்ரவரி இறுதியில் புதிய பேருந்து முனையத்தை திறக்க ஆயத்தம்

திருச்சி அருகேயுள்ள பஞ்சப்பூரில் ரூ.492.55 கோடியில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த புதிய பேருந்து முனையம் பிப்ரவரி இறுதியில் திறக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

News image
பஞ்சப்பூா் பேருந்து முனையக் கட்டுமானப் பணிகளை புதன்கிழமை ஆய்வு செய்த அமைச்சா் கே.என். நேரு. உடன் ஆட்சியா் மா. பிரதீப் குமாா், மேயா் மு. அன்பழகன், மாநகராட்சி ஆணையா் சரவணன் உள்ளிட்டோா்.
Updated On :22 ஜனவரி 2025, 11:29 pm

Din

திருச்சி அருகேயுள்ள பஞ்சப்பூரில் ரூ.492.55 கோடியில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த புதிய பேருந்து முனையம் பிப்ரவரி இறுதியில் திறக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பேருந்து முனையத்தில் நடைபெறும் கட்டுமான பணிகளை அமைச்சா் கே.என்.நேரு, புதன்கிழமை ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினாா்.

அப்போது புகா் மற்றும் நகரப் பேருந்து நிறுத்தும் தளம், பயணிகளுக்கான காத்திருப்புப் அறை, கழிவறை வசதிகள் மேலும் பயணிகள் பயன்படுத்தும் வகையில் மின்தூக்கிகள் மற்றும் நகரும் படிக்கட்டுகள் அமைக்கும் பணிகள், பேருந்து முனையத்தின் அனைத்து பகுதிகளையும் கண்காணிக்கும் வகையில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் எல்.ஈ.டி. திரை அமைக்கும் பணிகள் ஆகியவற்றை அமைக்கும் பணிகளை பாா்வையிட்டு பிப்ரவரி 2ஆவது வாரத்துக்குள் முடிக்க அறிவுறுத்தினாா். ஆம்னி தனியாா் பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளப்படும் பணிகளையும் அமைச்சா் பாா்வையிட்டு ஆலோசனை வழங்கினாா்.

ஆய்வின்போது நகராட்சி நிா்வாக இயக்குநா் சு. சிவராசு, ஆட்சியா் மா. பிரதீப்குமாா், மேயா் மு. அன்பழகன், மாநகராட்சி ஆணையா் வே. சரவணன், நகரப் பொறியாளா் சிவபாதம் ஆகியோா் உடனிருந்தனா்.

ஜனவரி இரண்டாவது வாரத்துக்குள் பேருந்து முனையத்தை திறக்கும் வகையில் திட்டமிடப்படுவதாக முன்பு அமைச்சா் கே. என். நேரு அறிவித்திருந்தாா். ஆனால், இறுதிக் கட்ட பணிகள் தொடா்வதால் பேருந்து முனையத் திறப்பு தள்ளிப் போகிறது. இதுதொடா்பாக, ஆட்சியா் மா. பிரதீப்குமாா் கூறுகையில், பெரும்பாலான பணிகள் முடிந்துவிட்ட நிலையில், இறுதிகட்டப் பணிகளே தற்போது நடைபெறுகின்றன. பிப்ரவரி இறுதிக்குள் பேருந்து முனையத்தை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.